சுகப்பிரசவம் ஆக வேண்டுமா?..
கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் இருந்தே சில உணவு முறைகளை கடை பிடிச்சா தாய் சேய் நலமா இருக்குற தோட சுகப் பிரசவத்துக்கும் வழி வகுக்கும்.
1, கர்ப்பத்தின் ஆரம்ப மாதங்களில் வாய்வு அதிகம் உள்ள பொருள்களான வாழைக்காய், உருளைக் கிழங்கு, இறால், மீனெல்லாம் சாப்பிடக் கூடாது.
2. கர்ப்பமான நாள் முதல் பிரசவம் ஆகுற வரைக்கும் முருங்கை இலை, சின்ன வெங்காயம், சீரகம் எல்லாவற்றையும் சேர்த்து சூப்பு வைத்து சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஆகும்.
3. மூன்றாவது மாதம் முதல் பிரசவம் ஆகுற வரைக்கும் வெந்தயக் கஞ்சி சாப்பிடுறது சுகப் பிரசவத்திற்கு வழி வகுக்கும். வெந்தயம் ஒரு ஸ்பூன் அரிசி ரெண்டு ஸ்பூன் உடைத்து போட்டு கஞ்சியாக காய்ச்சி பால் சேர்த்து மூன்று நாளிற்கு ஒரு முறை சாப்பிடலாம்.
4. ஐந்தாவது மாசத்தில் இருந்து எலுமிச்சை அளவு வெண்ணையை ஒரு டம்ப்ளரில் கொதி நீரில் கலந்து காலை அல்லது மதிய வேலையில் சாப்பிடலாம்.
5. 7 வது மாதத்திற்குப் பிறகு வடகத்தை பொறித்து அதில் ஒரு டம்பளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அரை டம்பளர் ஆனதும் குடிக்கலாம். இதை வாரத்தில் இரண்டு முறை செய்யவும்.
நம்மால் முடியும் என்ற மன வலிமையை வளர்துக்கிட்டால் சுகப்பிரசவம் சாத்தியம் தான்.










