Friday, 11 May 2018

*ஒரு டீக்கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம், டீயை விடவும் சூடாக இருந்தது.*

"இருவடை எடுத்து ஒருவடை என்பார்
திருவோடு ஏந்தி தெருவோடு போவார்.!"

மாஸ்டர் டீ போடுகிற நேரத்தில், தட்டிலிருக்கும் வடையில் இரண்டை கபளீகரம் செய்து விட்டு ஒரு வடைதான் என்று காசு கொடுப்பவர்களை கண்டிப்பதற்காக எழுதப்பட்ட வாசகம் இது. சுவாரஸ்யமாக இருக்கிறது என்றாலும் வடை எடுக்கிற எல்லோருக்கும் இது சங்கடத்தையே ஏற்படுத்தும்.

இதைப் படிக்கும்போது உங்களுக்குள் ஏற்படும் மன உணர்விற்கும் இனி வரும் வரிகளை படிக்கும்போது ஏற்படும் மன உணர்விற்கும் உள்ள வித்தியாசத்தினை கவனியுங்கள்.

*ஒரு ஆட்டோவில் எழுதப்பட்ட வாசகம், ‘உங்களின் வழிச் செலவு, எங்களின் வாழ்க்கை செலவு.’*

டிரைவர் சீட்டின் முதுகில் எழுதப் பட்டிருந்தது இந்த வாசகம்... இறங்கிய பின் யாரையும் பேரம் பேச விடாது. மீட்டருக்கு மேல ஐந்து ரூபாய் போட்டுக் கொடுங்க சார் என்கிற வார்த்தைக்கும் இந்த வாசகத்திற்கு எத்தனை வேறுபாடு.

அதனால் தான் சொல்கிறேன், சொல்லும் விதத்தில் வெல்லலாம்.

*ஒரு மொத்த விற்பனை மீன் கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம்,*
*மீன் சாப்பிட வேண்டாம் என்று நினைத்தேன். மீனவன் சாப்பிட வேண்டாமா?*

வார்த்தைகளில் இல்லை வெற்றி. அது வெளிவரும் விதத்தில்தான் வெற்றி இருக்கிறது.

டீக்கடை வரியும் ஆட்டோவில் எழுதப்பட்ட வரிகளும் ஒரே விஷயத்தினைத்தான் சொல்கிறது. ஆனால் சொல்லப்பட்ட விதம்தான் அதில் வித்தியாசம்.

*சொல்ல வந்ததை அழகாக சொல்வது ஒரு கலை.*
*நினைக்கும் விஷயங்களை எல்லாம் பேசாமல் அதை செம்மைபடுத்தி பேசிப்பாருங்கள் வெற்றி நிச்சயம்.*

ஒரு ஹோட்டலில் எழுதி மாட்டி இருக்கும் வாசகம்...
‘வீட்டு சமையலுக்கு ஒரு நாள் விடுமுறை விடுங்கள்.


Thursday, 10 May 2018

ஒரு கதை "சுட்ட நாக்கு"

                          சுட்ட நாக்கு

குரு ஒருவருக்கு பேரழகியான ஒரு மகள் இருந்தாள், அதனால் அவளை திருமணம் முடிக்க பலர் போட்டி போட்டனர். அவர் தன் மகளை மனம் முடிக்க போட்டி போட்டவர்களிடம் " நான் இரண்டு கேள்விகள் கேட்பேன். அதற்கு சரியான பதில் சொல்பவருக்கே எனது மகள்" என்று சொன்னார்.
மறுநாள் போட்டியாளர்கள் அனைவரும் குரு வீட்டில் கூடி இருந்தனர்.
குரு அவர்களைப் பார்த்து " உலகிலே இனிமையான ஒரு பொருளை கொண்டு வாருங்கள்" என்று சொன்னார்.
மறுநாள் எல்லோரும் ஆளுக்கொரு பொருளை கொண்டு வந்தனர்.
ஒருவன் தேனைக் கொண்டுவந்தான். இன்னொருவன் கரும்பைக் கொண்டு வந்தான். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு இன்னிமையான பொருளைக் கொண்டு வந்திருந்தனர்.
வரிசையில் கடைசியாக குருவின் ஒரு ஏழை சிஷ்யனும் நின்டிருந்தான்.
குரு அவனைப் பார்த்து நீயுமா என்று ஆச்சரியமாக கேட்டார்.சீடன் நான் உங்கள் மகளைக் காதலிக்கிறேன் என்று சொன்னான். குரு நீ என்ன கொண்டு வந்திருக்கிறாய் என்று கேட்டார்.
சீடன் தான் கொண்டு வந்திருந்த சிறிய பெட்டியை திறந்து காட்டினான்.
அதனுள் ஒரு ஆட்டின் நாக்கு இருந்தது.
குரு அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
குரு 'என்ன இது எதற்காக இதை கொண்டு வந்தாய்" என்று கேட்டார்,
சீடன் " குருவே நீங்கள் உலகிலேயே இனிமையான பொருளை கொண்டுவர சொன்னீர்கள். நாவை விட உலகில் சிறந்த பொருள் வேறு ஏது?
மனிதனுடைய நாவை கொண்டு வர முடியவில்லை. அதனால் தான் குறிஈடாக ஆட்டின் நாவை கொண்டுவந்தேன். நாவில் இருந்து தான் இனிமையான சொற்றகள் வருகின்றன. அதை சோகத்தில் இருப்பவன் கேட்டால் சந்தோசம் அடைகிறான். நோயாளி கேட்டால் குணம் அடைகிறான்." என்றான்.
குரு "இதில் நீ வெற்றி அடைந்தாய். வாழ்த்துக்கள்" என்று சொன்னார்
சீடன் அடுத்த கேள்வி என்ன என்று கேட்டான்.
குரு " உலகிலேயே கசப்பான ஒரு பொருளை கொண்டு வா" என்று சொன்னார்.மறுநாள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கசப்பான பொருளை கொண்டு வந்தனர். ஒருத்தன் வேப்பங்காயை கொண்டு வந்தான், இன்னொருவன் எட்டிக்காயை கொண்டு வந்தான். கடைசியாக சீடன் வந்தான். அவன் கையில் அதே பெட்டி. அவன் அதை திறந்து காட்டினான். அதே ஆட்டின் நாக்கு.
குரு " என்ன விளையாடுகிறாயா? இனிமையான பொருளை கேட்டேன் நாவை கொண்டு வந்தாய். கசப்பான பொருளை கேட்டதற்கும் நாவை கொண்டு வந்து இருக்கிறாயே? என்ன அர்த்தம்?" என்று கோபமாக கேட்டார்/
சீடன் " தீய சொற்களை பேசும் நாவை போல கசப்பான பொருள் உலகில் உண்டா? அதில் இருந்து வரும் சொற்களைக் கேட்டால் மகிழ்ச்சியாய் இருப்பவனும் துயரம் கொள்கிறான். நட்பாக இருப்பவனும் பகையாக மாறுகிறான். எனவே நாவு தான் உலகிலேயே கசப்பான பொருள்" என்று சொன்னான்.
சீடனின் அறிவைக் கண்டு வியர்ந்த குரு தான் மகளை அவனுக்கே மனம் முடித்துக் கொடுத்தார்.

*நாவு ஒரு அற்புத பொருள். சொர்கத்தின் திறவுகோலும் அது தான். நரகத்தின் வாசல்படியும் அது தான்*👅👅👅👅👅😀😃😃😄
👌👌👌👍👀👍👌👌👌

உங்களுக்கு தெரியுமா
உங்க விழிகள் இரண்டிற்கும் இடையிலுள்ள ஒற்றுமையை.. பாருங்கள். 👀

👀 *ஒன்றாக சிமிட்டும்*

👀 *ஒன்றாக நகரும்*

👀 *ஒன்றாக அழும்*

👀 *பொருட்களை ஒன்றாக பார்க்கும்*

*இவ்வளவிற்கும் அவை ஒன்றை ஒன்று பார்த்தது கூட இல்லை.*

*நட்பு* என்பதும் இது போன்றே...

*நட்பு* இல்லையெனில் வாழ்க்கை வெறுமை ஆகிவிடும்.

ஹோட்டல் இட்லி பயங்கரம். Hotel food danger

*ஹோட்டல் இட்லியில் ஒளிந்திருக்கும் பயங்கரம் -படியுங்கள் பகிருங்கள்*

சென்னையில் ஒரு உணவு விடுதி ஒன்றில் இட்லி சாப்பிடச் சென்றேன். சமையல் அறையில் இட்லி வேகவைப்பதை தற்செயலாக பார்க்க நேர்ந்தது.இட்லி வேகவைக்கும்தட்டில் பாலிதீன் பேப்பரை விரித்து அதன்மேல் இட்லிமாவைஇட்டு வேகவைக்கும்காட்சியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

அந்த இட்லிகளை உணவுப் பரிசோதனைக்கு அனுபவித்தார் நண்பர் ஒருவர். புற்றுநோயைஉருவாக்கக் கூடியபாலித்தீன் துகள்கள் அந்த இட்லிகள் முழுவதும் பரவி இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.
கடைக்காரரிடம் இதைச்சொல்லி தயவுசெய்து துணியைவிரித்து அதன்மேல் இட்லி வேகவைப்பதை செய்யுங்கள் என்று சொன்னோம்.

அதற்கு அவர் பதில்கூறினார்.தமிழ்நாடு முழுவதும் உள்ளபெரும்பாலான ஹோட்டல்களில்பாலித்தீன்பேப்பர்களின் மீதுதான் இட்லிகள்வேகவைக்கப்படுகின்றன.
இதுதான் எளிதாகவும் சவுகரியமாகவும் உள்ளது. துணிகளைப்பயன்படுத்தினால் இட்லிகளைப்பிரிப்பது சிரமமாக உள்ளது. வேளைப்பளுவும் கூடுகிறது.

கேன்சர் இட்லிகள் விற்பனையை எப்படித்தடுப்பது என யோசிக்கிறீர்களா?

முதலில் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்


மக்கள் நலன் கருதி இதை உடனே அதிகமாக பகிருங்கள்.

Health tips இன்றைய மருத்துவ பலன்

         

இன்றைய மருத்துவ பலன்


நமது உடலில் நடைபெறும் இரசாயன மாற்றங்கள் அனைத்திற்கும் அடிப்படையாகத் திகழ்கிறது கல்லீரல். கல்லீரல் பாதிக்கப்படும் போதுதான் மஞ்சள் காமாலையில் இருந்து நமது உடலை பெரிதும் பாதிக்கும் பல வியாதிகள் ஏற்படுகின்றன.எனவே கல்லீரலை முறையான உணவு மற்றும் ‘இதர’ பழக்கங்களில் மூலம் பாதிக்காமல் காப்பது உடல் நலத்தை காப்பதற்கு ஒப்பானதாகும்.

நமது நாட்டைப் பொறுத்தவரை கல்லீரல் தொடர்பான நோய்கள் ஏற்படுவதற்கு இரண்டு காரணிகளே முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒன்று, குடிப் பழக்கம். இரண்டாவதாக, கொழுப்பு நிறைந்த உணவுகள்.

அளவிற்கு அதிகமாக குடிப்பதனால் கல்லீரலிற்கு ஏற்படும் பாதிப்பே சாதாரண மஞ்சள் காமாலை நோயிலிருந்து ஹெப்பாடிடிஸ் பி ஆகியனவும், நீரிழிவு உள்ளிட்ட நோய்களும் ஏற்படுகின்றன. இவற்றை ஆல்கஹால் தொடர்பான கல்லீரல் நோய்கள் என்று மருத்துவம் கூறுகிறது.
மற்றொரு வகையான பாதிப்பு கல்லீரலில் கொழுப்பு அதிகமாகச் சேர்வதால் உண்டாகிறது. இதனை ஆல்கஹால் அல்லாத கல்லீரல் கொழுப்பு வியாதிகள் (Non-alcoholics fatty liver disease – NAFLD) என்று மருத்துவம் வகைப்படுத்துகிறது.

இந்த இரண்டாவது வகை – அதாவது கொழுப்பு சேகரிப்பால் கல்லீரல் கெடுவது – ஒருவருக்கு 35 வயதில் ஏற்படுகிறது என்று வைத்துக் கொண்டால், அவர் 55 வயதை அடையும்போது, கல்லீரல் வீக்கம் ஏற்பட்டு, அதனை மாற்றுக் கல்லீரல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகிறது. கல்லீரல் வீங்கி சிகிச்சையால் குண்பபடுத்த முடியாத நிலையைத்தான் லிவர் சிர்ரோசிஸ் என்றழைக்கின்றனர்.

நமது நாட்டைப் பொறுத்தவரை பலரும் மதுவினாலும், கொழுப்பு உணவுகளாலும் கல்லீரல் பாதிப்பிற்குள்ளானவர்களாக உள்ளனர். மது குடிப்பவர்கள் குடிக்கும் போது சாப்பிடும் உணவு வகைகள் பொதுவாக எண்ணெய் கலந்து தயாரிக்கப்படும் உடனடி உணவுகளாகவும் (fast foods), கொழுப்புச் சத்து அதிகம் கொண்ட உணவுகளாகவும் இருப்பதால் கல்லீரலிற்கு பாதிப்பு அதிகமாகிறது. இதுவே கல்லீரலை பலவீனப்படுத்தி, அது தொடர்பான எல்லா நோய்களுக்கும் வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறது.

முறையான உணவுப் பழக்கம், காலையில் உடற்பயிற்சி ஆகியன கல்லீரலை பாதுகாக்கும் மிகச் சாதாரண வழிகளாகும். பாதிக்கப்பட்டாலும் மருத்துவத்தின் உதவியால் மீண்டும் பழைய நிலைக்கு வந்து செயல்படும் திறன் பெற்ற உடலின் ஒரே உறுப்பு கல்லீரல் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கதாகும். எனவே, அதிகமாகக் குடித்தல், கொழுப்பு உணவுகளை அதிகம் சாப்பிடுதல் ஆகியவற்றை தவிர்த்தால் போதும். நல்ல கல்லீரலுடன் வாழ்நாள் முழுவதும் நன்றாக வாழலாம்.

“நமது உடலில் கல்லீரல் தான் நமக்கு மிகவும் உதவும் உறுப்பு. நமது உடலில் ஏற்படும் பல இரசாயன மாற்றங்களுக்கு அதுவே அடிப்படையாக உள்ளது. காயப்பட்டாலும் மீண்டும் பழைய நிலைக்கு வரும் திறன் கொண்டது. ஆனால் குடிப்பழக்கம், கொழுப்புணவுகள் மூலம் அதனை அதிகமாக கெடுத்துவிட்டீர்களானால், அது செயலற்றுப் போய்விடும். அதன் விளைவாக மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படும்”

குடிப்பழக்கத்தால் கல்லீரல் பாதிக்கப்பட்டவர்களிடம் களைப்பு, மலச் சிக்கல், மஞ்சள் காமாலைக்கான லேசான அறிகுறி ஆகியன இருக்கும். இதனைக் கண்டவுடன் உடனடியாக மருத்துவரை அணுகி, இரத்தச் சோதனை உள்ளிட்ட உடல் சோதனைகளைச் செய்து, நிலையை அறிந்து உரிய சிகிச்சை பெற வேண்டும். அதனைச் செய்யத் தவறினால் அது கல்லீரல் வீக்கத்தில் (லிவர் சிர்ரோசிஸ்) சென்று முடியும். அந்த நிலையில் கல்லீரல் மாற்றுச் சிகிச்சை தவிர வேறு வழி இல்லை.

எனவே, வெளியில் உணவு அருந்தும் போதும், நண்பர்களுடன் வாழ்வின் ஆனந்தமான அந்தப் பொழுதை மதுபானத்துடன் கழிக்கும்போதும் நினைவில் நிறுத்துக: கல்லீரல் நலம்.

Scold your children. குழந்தைகளை திட்டுங்கள்

குழந்தைகளைத்   திட்டுங்கள்'


இன்றைய பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை திட்டுவதே இல்லை என்பதை பெருமையாகச் சொல்கிறார்கள்.

🌼ஆனால், இப்படித் திட்டி வளர்க்கப்படாத பிள்ளைகள்தான், 'டீச்சர் திட்டினார்', 'அம்மா முறைத்தாள்', 'அப்பா அடிக்க கையை ஓங்கினார்' எனச் சின்னச் சின்ன காரணங்களுக்காகத் தற்கொலை வரை செல்கிறார்கள். தவறு செய்கிற குழந்தைகளைப் பெற்றோர் திட்டித் திருத்துவது, இயல்பான விஷயம்.

🌼பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் திட்டு வாங்கும் குழந்தைகள், தோல்விகளிலிருந்து தங்களை வேகமாக மீட்டெடுத்துக்கொள்வார்கள்;

🌼அதனால், உங்கள் குழந்தைகளை வசவுகளுக்குப் பழக்குங்கள். அது அவர்களுக்கான மன அழுத்த மேலாண்மை... இப்படிச் செல்கிறது அந்த வாட்ஸ்அப் மெசேஜ்
'குழந்தைகளைத் திட்டி வளர்ப்பது அத்தனை நல்ல விஷயமா?' என்ற கேள்வியை, குழந்தைகள் மனநல மருத்துவர் ஜெயந்தினியிடம் கேட்டோம்

ஒரு தலைமுறை முன்புவரை நம்மைப் பெற்றோர் திட்டித்தானே வளர்த்தார்கள். டீன்ஏஜ் வயதிலும் பெற்றவர்களிடம் அடிவாங்கி இருக்கிறோமே. அவர்கள் திட்டி சரிப்படுத்தியதால் என்ன குறைந்துவிட்டோம்? நன்றாகத்தானே இருக்கிறோம்? பிள்ளைகளைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் திட்டுவது தங்கத்தைப் புடம் போடுவதுபோல...

🌼 இன்றைய குழந்தைகளுக்கு அறிவுத்திறனும் நினைவுத்திறனும் அபாரமாக இருக்கின்றன. அவர்களைக் கொண்டாடவேண்டிய இடங்களில் கொண்டாடி, குட்டவேண்டிய இடத்தில் குட்டி வளர்த்தால், மிகப்பெரிய சாதனைகளுக்குச் சொந்தக்காரர்கள் ஆவார்கள்.

🌼 அதைவிடுத்து, 'நான்தான் என் பெற்றோரிடம் வசவும் அடியும் வாங்கி வளர்ந்தேன். என் பிள்ளைக்கு அதெல்லாம் கூடாது' என இருந்தால், உங்கள் குழந்தை மனதளவில் பூஞ்சையாக இருக்கும். இதுதான் நீங்கள் வேண்டுவதா?

🌼சில நாள்களுக்கு முன்பு, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில், 'அம்மா டி.வி. பார்க்க விடுவதில்லை. ஏன் படிக்கலைன்னு கேள்வி கேட்கிறார். அதனால் அவருக்கு ஒரு லெஸன் டீச் பண்ணணும்னு, ஆரஞ்சு ஜூஸ்ல விஷம் கலந்து தற்கொலை செஞ்சுக்க டிரை பண்ணினேன்' என்று பள்ளிச் சிறுமி சொல்லியிருக்கிறாள். இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் தெரியுமா? சிறு வயதிலிருந்து 'ஏய்' என்கிற அதட்டல்கூட போடாமல் வளர்த்துவிட்டு, திடீரென்று 'பிள்ளை கைமீறிப் போகிறதே' என்ற பயத்தில் தட்டிக் கேட்கும்போது, அவர்கள் மனம் உடைகிறது. அதிர்ச்சியிலும் கோபத்திலும் தவறான முடிவை எடுக்கிறார்கள். அல்லது இந்தச் சிறுமிபோல, பெற்றவர்களையே தற்கொலை என்ற பெயரில் மிரட்டத் துணிகிறார்கள்.

மேலே சொன்ன சிறுமி போல் இல்லாமல்,

🌼பெற்றோரடமும் ஆசிரியர்களிடமும் தங்களின் தவறுகளுக்காகத் திட்டு வாங்கும் குழந்தைகள், அவற்றைத் திருத்திக்கொள்வார்கள்.

தங்கள் தவறுகளினால் கிடைக்கும் தோல்விகளிலிருந்து சீக்கிரமே மீண்டு வருவார்கள்.

🌼குழந்தைகளைத் தண்ணீர்போல வளர்க்க வேண்டும். அப்போதுதான் எந்தச் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு தங்களை அட்ஜஸ்ட் செய்துகொள்வார்கள்.

🌼ஒருவரை அனுசரிப்பது, அவர்களைக் குற்றம் குறைகளுடன் ஏற்றுக்கொள்வது,

🌼அடுத்தவர்களுக்கு விட்டுக்கொடுப்பது,

🌼தன் தவற்றுக்கு மன்னிப்பு கேட்பது,

🌼 மற்றவர்களை மன்னிப்பது,

🌼தான் கேட்பது எல்லாம் கிடைக்கும் என்ற மனப்பான்மையிலிருந்து விடுபடுவது

போன்ற குணங்களை 5 வயதுக்குள்ளாகவே குழந்தைகளிடம் உண்டாக்குவது அவசியம்.

🌼 இளஞ்செடியாக இருக்கும்போது வேலி போடுவதுதான் சுலபம். பிள்ளைகள் மரமான பிறகு, வேலியைக் கட்டுவதால் பயனில்லை.

🌼அதனால், 'அம்மா திட்டுவாங்க; அப்பா திட்டுவாங்க' என்ற மனநிலையைப் பிள்ளைகளிடம் உருவாக்குங்கள்.

Sunday, 6 May 2018

😃😃😃😃😃😃😃😃😃😃சிரிப்பே வராதவர்கள் முயற்சிக்கவும். 😁😁😁😁😁😁

ஒரு கிராமத்துல ஒரு பாட்டி தன் பேரனோடு வசித்து வந்தார்.
ஒரு நாள் அந்த பாட்டி காலில் புண் ஏற்பட்டுவிட்டது.

நீண்ட நாள்களாகியும் காலில் இருந்த புண் ஆறவில்லை.
இதனால் பாட்டியுன் பேரன் மிகவும் வருத்தமடைந்தான்.

பேரனின் நண்பன் ஒருவன்.. பாட்டியின் காலில் ஏற்பட்டிருக்கும் புண் குணமடைய தினமும் கடல்நீரை எடுத்துவந்து காலில் ஊற்றினால் போதும் என்றான்.

அதை கேட்ட பேரனுக்கு மிகவும் மகிழ்ச்சி.
வீட்டிற்கு வந்தவனுக்கு திடிரென்று ஒரு சந்தேகம் உண்டாகியது.

கடல்நீரோ பொதுச்சொத்து. தனிமனிதன் சுயநலத்திற்காக பொதுச்சொத்தான கடல்நீரை பயன்படுத்தலாமா..?
என்ற குழப்பம் உண்டாகியது..

எதற்கும் விஏஓ விடம் அனுமதி பெற்றுவிடலாம் என்று..
விஏஓவிற்கு ஒரு  கடிதம் எழுதினான்.

மதிப்பிற்குரிய விஏஓ அவர்களே.. இதுமாதிரி  என் பாட்டிக்கு உடம்பு சரியில்ல.. கடல்தண்ணீர எடுத்து பயன்படுத்த உங்கள் அனுமதி வேண்டும்னு கேட்டு எழுதினான்.

கடிதத்தை படித்த விஏஓ அதிர்ச்சி அடைந்தார். இது எவன் செஞ்ச கூத்துனு தெரியலயே.. இதுவரைக்கும் எவனும் இது மாதிரி ஒரு அனுமதி கேட்டதில்லையே.. இப்படி ஒருத்நன் கேட்குறான்னாலே ஏதோ வில்லங்கம் இருக்குனு அர்த்தம்..

நமக்கெதுக்கு வம்பு பேசாம தாசில்தார்க்கு அனுப்பிடுவோம்னு..
பேரன் எழுதுன கடிதத்ததையும் சேர்த்து
அனுப்பினார்.

தாசில்தாசிரிடம் அந்த கடிதம் சென்றது.
தாசில்தார் பார்த்தார். அந்த விஏஓவுக்கும் நமக்கும் ரொம்ப நாளா வாய்க்கா தகராறு.. எப்படி நம்மள பழிவாங்கலாம்னு பார்த்துட்டு இருந்தான்.. அவன்தான் ஏதோ சூழ்ச்சி பண்றான்.. பேசாம இதை கலெக்டருக்கு அனுப்பிடுவோம்னு..
மாவட்ட ஆட்சியர் அவர்களே.. எங்க பகுதி  கிராமத்து பாட்டி காலுல புண்ணு.. அதற்கு கடல் தண்ணிய பயன்படுத்திக்க அனுமதிக்கிறிங்களானு..? கேட்டு அவர் ஒரு கடிதம் எழுதினார்.

கடிதம் கலெக்டர் கைக்கு கிடைத்தது.
கலெக்டர் யோசித்தார். அனுமதி கேட்டவன் ஆளுங்கட்சிகாரனா எதிர்க்கட்சி காரனானு தெரியலயே..

கேட்டவன் ஆளுங்கட்சிகாரனா இருந்து அனுமதி கொடுத்துட்டா எதிர்க்கட்சிக்காரன் போராட்டம் நடத்துவான்.

கேட்டவன் எதிர்க்கட்சிக்காரனா  இருந்து அனுமதி கொடுத்துட்டா ஆளுங்கட்சிகாரன் கோபத்துக்கு ஆளாகனும்..
நமக்கு எதுக்கு வம்புனு.. கலெக்டர் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்தார்.

 அனுமதி கடிதம் அமைச்சர் கையில் கிடைத்தது. எந்த கிறுக்கன் இப்படி ஒரு பிரச்சினைய கெளப்புனதுனு தெரியலயே.. தெரியாத்தனமா அனுமதி கொடுத்துட்டு நாளைக்கு திரும்பி வந்தாங்கனா நம்ப அமைச்சர் பதவியே காலியாகிடுமேனு..

ஆத்து  தண்ணி, குளத்து தண்ணி , கிணத்து தண்ணிதான் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வரும்.. நீங்கள் கேட்பதோ கடல் தண்ணி.. கடலோர பாதுகாப்பு மத்திய அரசு கட்டுப்பாட்டுல வரும்..
அதனால உங்கள் அனுமதி கடித்தத்தை நான் மத்திய அரசுக்கு அனுப்புறன்னு கலெக்டருக்கு அமைச்சர் பதில் எழுதினார்.

கடிதம் மத்திய நீர்வளத்துறையின் கையில் கிடைத்தது. அமைச்சர் பிரதமரிடம் பேசினார்.
அவரோ தான் பல வெளிநாடுகளுக்கும் பயணம் செய்திருப்பதாகவும்.. அந்த அனுபவத்தின் படி பார்த்தால்..
என்னதான் கடலின் ஒரு கரை நம்ம நாட்டில் இருந்தாலும் அடுத்தகரை அடுத்த நாட்டில் உள்ளது. எனவே கடல் தண்ணியை எடுத்து பயன்படுத்துவது என்பது சர்வதேசப்பிரச்சினை..
ஆகவே அதுகுறித்து ஐநாசபையில் பேசி அனுமதி வாங்கும் வரை கடல்தண்ணியை எடுத்து பாட்டி காலை கழுவுவதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று..
மத்திய அரசின் உத்தரவு மாநில அமைச்சருக்கு வந்து..
மாநில அமைச்சரிடம் இருந்து
மாவட்ட கலெக்டருக்கு வந்து..
மாவட்ட கலெக்டரிடமிருந்து
தாசில்தாருக்கு வந்து அவரிடமிருந்து
விஏஓக்கு வந்து..
விஏஒ விடமிருந்து பாட்டியோட பேரன் கைக்கு  கிடைத்த போது பாட்டி செத்து நாற்பது நாளாகி இருந்தது...[இன்றய தமிழக அரசியல்]

(இந்த கதை சிரிக்க மட்டுமல்ல.... :( 🙁 ) சிந்திக்கவும்.
Mirror is the Best Friend
    "கண்ணாடி சிறந்த நண்பன் "

அந்தப் பெரியவரின்  கையில் ஒரு கண்ணாடி.   அடிக்கடி அதைப் பார்ப்பார். பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கிவிடுவார்.

பக்கத்து வீட்டு இளைஞனுக்குக் குறுகுறுப்பு…!

‘அந்தக் கண்ணாடியில் அப்படி என்னதான் இருக்கிறது? பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே!. ஒருவேளை மாயா ஜாலக் கண்ணாடியோ?’ அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

பெரியவரை நெருங்கினான்.

“ஐயா…!”

“என்ன தம்பி?”

“உங்கள் கையில் இருப்பது கண்ணாடிதானே?”

“ஆமாம்!”

“அதில் என்ன தெரிகிறது?”

“நான் பார்த்தால் என் முகம் தெரியும், நீ பார்த்தால் உன் முகம் தெரியும்!”

“அப்படியானால் சாதாரணக் கண்ணாடிதானே அது?”

“ஆமாம்!”

“பிறகு ஏன் அதையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?”

பெரியவர் புன்னகைத்தார்.

“சாதாரணக் கண்ணாடிதான், ஆனால் அது தரும் பாடங்கள் நிறைய!”

“பாடமா!. கண்ணாடியிடம் நாம் என்ன பாடம் பெற முடியும்?”

“அப்படிக் கேள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “உங்களில் ஒவ்வொருவரும் மற்றவர்க்குக் கண்ணாடி போன்றவர்கள்” என்று சொல்லியிருக்கிறார்கள்.

எத்துணை ஆழமான உவமை இது!”

“இந்த உவமையில் என்ன இருக்கிறது?. எனக்கு ஒன்றும் புரியவில்லை!”

“ஒருவர் மற்றவரின் குறைகளை எப்படிச் சுட்டிக்காட்ட வேண்டும். எப்படிச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதை யெல்லாம் இந்தச் சின்ன உவமை மூலம் இறைத்தூதர் சிறப்பாகச் சொல்லி விட்டார்!”

“எப்படி?”

“நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா?

“ஆமாம்”

“அதே போல் உன் சகோதரனிடம் நண்பனிடம் எந்த அளவுக்குக் குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது.

இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!”

“அடடே…! வெரி இன்ட்ரஸ்டிங்!. அடுத்து…?”

“கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும் போதுதான் உன் குறையைக்காட்டுகிறது.நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகிவிடும். இல்லையா?”

“ஆமாம்!”

“அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது. இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்!”

“கிரேட்! அப்புறம்?”

“ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக் கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா?”

“இல்லையே…! மாறாக அந்தக் கண்ணாடியைப் பத்திரமாக அல்லவா எடுத்து வைக்கிறார்!”

“சரியாகச் சொன்னாய். அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக்கொள்ள வேண்டும்.

இது கண்ணாடி தரும்
மூன்றாவது பாடம்!”

“ஐயா…! அருமையான விளக்கம். அண்ணல் நபிகளார் கூறிய கண்ணாடி உவமையில் இத்தனை கருத்துகளா… அப்பப்பா!”

“யோசித்தால் இன்னும் கூடப் பல விளக்கங்கள் கிடைக்கும்!”

“இனி கண்ணாடி முன்னால் நின்று என் முகத்தை அலங்கரிக்கும் போதெல்லாம் இந்த அறிவுரைகள் என் மனத்தை அலங்கரிக்கும்!”

பெரியவர் இளைஞனின் முதுகில் செல்லமாய்த் தட்டிக் கொடுத்தார்.

பெண் பிள்ளை பெற்றவரா நீங்கள்..?

 பெண் பிள்ளை பெற்றவரா நீங்கள்..?   Save your child!

பொம்புள புள்ளய பெத்தாலே வயித்துல நெருப்ப கட்டிக்கிட்டு அலையனும் ...சொல்வாங்க ..
இப்ப இருக்க காலம் அப்படி..
ஜான் பிள்ளை ஆனாலும் ஆண் பிள்ளை என்ற பேச்சு போச்சு...
பொறந்த புள்ள ஆனாலும்
பொம்புள புள்ள ...னு
ருசி தேடி அலையிர சில காம  பிசாசுகள் திரியிற காலம் இது..
நாம தான் நம்ம பிள்ளைகளை பத்திரமாக பாதுகாத்துக்கனும்.
அஸ்வினி ல ஆரம்பிச்சு ஆஷிபா னு ...கொஞ்சம் தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கு...இன்னும் இருட்டுல எத்தனை எத்தனை பிஞ்சுகள் நஞ்சு போச்சோ...? கடவுளுக்கு தான் வெளிச்சம்..

   இதோ சில டிப்ஸ் நம்ம பெண் பிள்ளைகளுக்கு...

1: சின்ன வயசிலே அந்தரங்க தொடுதல்களை புரிய வைத்தல்..
(பெண் பிள்ளைகளின் அந்தரங்க இடங்களை எந்த ஆணிற்கும் தொட உரிமை இல்லை ..தகப்பனாக இருந்தாலும் தவறு தான் ...மீறி யாராவது அவ்வாறு எண்ணத்தில் கை வைத்தால் பளார் என்று அறைந்து விடு என்று சொல்லிக் கொடுங்கள்)

2: சிறு பிள்ளைகள் தானே அதுவும் நம் பிள்ளைகள் தானே என்று நினைத்து பிள்ளைகள் முன் உடை மாற்றாதீர்கள்..
(நமக்கு சாதாரணமாக தோன்றினாலும் பிள்ளைகள் மனதில் பெண்களை அரைகுறை ஆடையில் காணுவது தவறில்லை என்ற எண்ணம் தோன்றிவிடும்..)

3: பெண் பிள்ளைகளை எந்த ஆண் மடியிலும் உட்கார அனுமதிக்காதீர்கள்..

4: பிள்ளைகள் யாராவது ஒருவரைப் பற்றி புகார் சொன்னால் அதை அலட்சியமாக விட்டு விடாதீர்கள்.

5: சில தற்காப்பு கலைகளை கற்றுக் கொடுங்கள்.

6: பெண் பிள்ளைகளின் ஆடைகளில் அதிக கவனம் செலுத்துங்கள்..எத்தனை வயது ஆனாலும் தாய்க்கு குழந்தை தான்..ஆனால் எல்லோருடைய  பார்வைக்கும்அவ்வாறு தோன்றாது.

7: பக்கத்து வீட்டு மாமா, தாத்தா என்று தனியாக பிள்ளைகளை யாரிடமும் விட்டுச் செல்லாதீர்கள்..

8: பள்ளி , டியூஷன் போன்ற இடங்களில் மாஸ்டர், வாட்ச்மேன் ஆகியோரின் நடவடிக்கைகளை பற்றி கேட்டுத் தெரிந்துக் கொள்ளுங்கள்..
( ஆசிரியர் என்று எழுத மனம் கணக்கிறது..ஆனால் வேலியே பயிரை மேய்கிற கலி காலம் இது)

9: முன் பின் தெரியாத நபர் உன் அம்மா அழைக்கிறார் அப்பா அழைக்கிறார் என்று கூப்பிட்டால் பாஸ் வேர்ட் சொல்லுங்க என்று பிள்ளைகளை கேட்க சொல்லுங்கள்..உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் ஒரு கடவுச் சொல்லை சொல்லிக் கொடுங்கள்..

10: இதையும் மீறி வலுக்கட்டாயமாக யாராவது கை பிடித்தால் காப்பாத்துங்க காப்பாத்துங்க என்று கத்த சொல்லுங்கள்.   சதை பிய்ந்து போகும் அளவுக்கு கடித்து விடு...என்று சொல்லிக் கொடுங்கள்..

ரௌத்திரம் பழகு..