உங்கள் குழந்தைகளை உற்சாகம் படுத்திக்கொண்டே இருங்க ..
"அடக்கி வளர்க்கப்படும் குழந்தை கோழையாக வளரும்.
கேலி செய்து வளர்க்கப்படும் குழந்தை திருடனாக வளரும்.
உற்சாகப்படுத்தி வளர்க்கப்படும் குழந்தை அறிவாளியாக வளரும்."
சொல்லுவாங்க.
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?
ஒரு பெரிய விஞ்ஞானி, தன்னோட சின்ன வயசுல ஸ்கூல்ல படிக்கவே லாய்க்கு இல்லன்னு டீசி குடுத்து அனுப்சுட்டாங்க, அவங்க அம்மா தான் என் பிள்ளையாலையும் படிக்க முடியும்னு வீட்டிலிருந்தே சொல்லி குடுத்தாங்க. அவரு யாருன்னு தெரியுமா? இன்னைக்கு உலகத்தையே இருட்டுல இருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வந்த நம்ம தாமஸ் ஆல்வா எடிசன் தாங்க.
ஒரு தாய் நெனச்சா தான் குழந்தைய எவ்ளோ உயரத்துக்கும் கொண்டு போக முடியும்.
"எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவன் நல்லவனாவதும் கெட்டவனாவதும் அன்னை வளர்ப்பினிலே !!"
அவரோட அம்மா போல உங்க குழந்தைகளோட உணர்வுகளையும் தட்டிக்கொடுத்து பாருங்க, நாளைக்கு உங்க குழந்தையும் உலகம் போற்றக்கூடிய அளவுக்கு வரலாம்.
ஒரு மேடையில் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் உரையாற்றிக் கொண்டிருந்தார்... அவர் பேசி முடிச்சதும் வழக்கம் போல எல்லோரும் கை தட்டினாங்க. ஆனா அதில் அவருக்கு திருப்தி இல்ல. இறங்கி வந்ததும் தன்னோட நண்பர் கிட்ட, என் பேச்சு எப்படி இருந்தது என்று கேட்டார்... அதற்கு அவரும், ரொம்ப அற்புதமான பேச்சுங்க உங்களோடது, நிறைய கருத்துகளை நான் குறிப்பெடுத்து வச்சிருக்கேன்.. அப்படின்னு சொன்னார். அப்பத்தான் அந்த கல்லூரி பேராசிரியருக்கு நிம்மதி வந்துச்சு.
பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த குழந்தை விளையாடிகிட்டு இருந்துச்சு... குழந்தையோட அம்மா, பள்ளிக் கூடம் சேர்த்து மூணு மாசம் ஆயிடுச்சே என்ன சொல்லிக் கொடுத்திருப்பாங்கன்னு ஆசைப்பட்டு தன் குழந்தையைக் கூப்பிட்டு தங்கம் ஒன்னு, ரெண்டு தெரியுமான்னு கேட்டாங்க, குழந்தை தெரியும்ன்னு சொல்லுச்சு... சொல்லுன்னு சொன்னதும், குழந்தை ஒன்னு, ரெண்டு, மூணு, நாலு... அத்தோட நிறுத்திகிச்சு. அம்மா மறுபடியும் சொல்ல சொன்னாங்க...
அப்பவும் அதே மாதிரி நாலு வரைக்கும் சொல்லி நிறுத்திகிச்சு. அம்மாக்கு கோபம், என்னடா குழந்தைக்கு ஒன்னு ரெண்டு கூட சொல்லத் தெரியலைன்னு நினைச்சு கிட்டு, அடுத்த நாள் பள்ளிக் கூடத்துக்குப் போனாங்க.. அங்க ஆசிரியர் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துட்டு இருந்தார். அவர் கிட்ட என்னங்க என் குழந்தை ஒன்னு, ரெண்டு கூட சொல்ல மாட்டேங்குது.. நீங்க சொல்லிக் கொடுக்களையான்னு கேட்டாங்க.. அதுக்கு அவர் சொன்னார் இல்லையே உங்க குழந்தை அழகா சொல்லுமே.. அப்படின்னு சொல்லிட்டு குழந்தைய கூப்பிட்டார்...
குழந்தை கிட்ட சொல்ல சொன்னார்... குழந்தை ஒன்னு சொல்லுச்சு, அப்போ ஆசிரியர் ம்ம்.. அப்படினார். குழந்தை ரெண்டு சொல்லுச்சு, ஆசிரியர் ம்ம் அப்படின்னார். குழந்தை மூணு சொல்லுச்சு, ஆசிரியர் ம்ம்.. அப்படின்னார்.. குழந்தை அப்படியே நூறு வரை சொல்லிடுச்சு... அப்போ அவங்க அம்மா சொன்னாங்க நான் நேத்து கேட்ட போது சொல்லலையே இப்போ மட்டும் எப்படி சொல்லுச்சு அப்படின்னு... அதுக்கு ஆசிரியர் சொன்னார், குழந்தை புதுசா கத்து கிட்டு வந்த விஷயத்தை நீங்க அங்கீகரிக்கனும்... ஒன்னு அப்படின்னு சொல்லி முடிச்சதும் நீங்க ம்ம்.. அப்படின்னு ஒரு சின்ன உற்சாகத்தை கொடுத்திருக்கணும்...
இயந்திரம் தான் தொடர்ச்சியா சொல்லிகிட்டே இருக்கும். மனிதர்களுக்கு தேவை உற்சாகம் மட்டுமே. அதுவும் குழந்தைகளுக்கு ரொம்பவும் முக்கியம், அப்படின்னு அம்மா செய்த தவறை சுட்டிக் காட்டினார்.
ஒரு கல்லூரிப் பேராசிரியருக்கே தன் பேச்சுக்கான உற்சாகமும் அங்கீகாரமும் தேவைப் படுகிற போது, குழந்தைகளுக்கு, அவர்களின் சிறு சிறு முயற்சிகளுக்கு நாம் உற்சாகம் அளிக்கிறோமா என்பது மிக முக்கியமானது... எனவே கற்றுக் கொள்ள வேண்டியது நாம் தான், ஏனெனில், நாமும் அதே அங்கீகாரத்திற்கு தான் காத்திருக்கிறோம்...
ஒவ்வொரு வருஷமும் குழந்தைகள் தினைத்தை கொண்டாடுகிறோமே எப்போ குழந்தைகள கொண்டாட போகிறோம்?
great job..keep it up
ReplyDeleteThank you for your motivation :)
Deleteஅழகான அறிவுரை வழங்கியதற்கு நன்றி
ReplyDeleteஅழகான அறிவுரை வழங்கியதற்கு நன்றி
ReplyDeleteஇன்னும் அதிகம் உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறேன்
ReplyDeleteஇன்னும் அதிகம் உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறேன்
ReplyDeleteஜலால் ஜி உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றிகள் பல. ..
ReplyDeleteஅடிக்கடி இது போன்று வருகை தந்து உங்கள் கருத்துக்களையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். ..
Good
ReplyDeleteGood
ReplyDelete