Tuesday, 7 July 2015


எச்சரிக்கை...சி.எப்.எல் (CFL) பல்புகள்


 ல்புகள் கை தவறி விழுந்து விட்டால் உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதார துறை எச்சரித்து உள்ளது. 


ஏன் என்றால் இந்த மெர்குரி திரவம் ஆர்செனிக், துத்த நாகத்தை விட அதிக விஷ தன்மை உடையது.
 இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சர்மத்தில் பட்டாலோ தலைவலி, மூளை பாதிப்பு, உடல் அசைவுகள் பாதிகப்பட்டு நிலை தடுமாற்றம் ஏற்படுமாம். அலர்ஜி பிரச்சனை உள்ளவர்களுக்கு சர்ம பாதிப்புகளும் ஏற்படுமாம்.

சி.எல்.எப் பல்புகள் உடைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும் ? 

--> உடனே அந்த அறையில் இருந்து வெளி ஏறி விட வேண்டும். அந்த நெடி மூக்கில் ஏறக்கூடாது. பதினைந்து நிமிடங்கள் ஆனப்பின் அப்புறப் படுத்தலாம்.

--> கண்ணாடி துகள்கள் காலில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

--> வேக்கும் க்ளீனரால் சுத்தப்படுத்தக் கூடாது. வேக்கும் உறிஞ்சப் பட்டால், அது உள்ளே ஒட்டிக் கொள்ளும். அதை திரும்ப உபயோகிக்கும் போது மெர்குரி துகள்கள் மற்ற அறைகளுக்கும் பரவி மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்ப்படுத்தும்.


--> கைகளில் ரப்பர் க்லவ்ஸ் போட்டுக் கொண்டு சாதாரண துடைப்பத்தால் சுத்தப் படுத்தலாம்.

--> உடைந்த துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டிக் பையில் சேகரித்து குப்பைத் தொட்டியில் போடவும்.


                                
முடிந்த வரை இதை நண்பர்களிடம் பகிரவும் ..

2 comments:

  1. Thanks for useful mgs. .I will share this with my friends and family. ..

    ReplyDelete
  2. Welcome viji ...
    Thanks for your comment. ..

    ReplyDelete