Sunday, 5 July 2015

உணவே விஷம் உஷார் !!

ந்த அவசர உலகத்துல பொண்டாட்டி புள்ளைங்க கீழ விழுந்தா தூக்கி விட கூட நேரம் இல்லாம ஏறி மிதிச்சுட்டு ஓடுற நிலைமை தான் மனுஷனுக்கு. ஆமாங்க! 

ஓட்டமும் வேகமும் தான் வாழ்க்கையா ஆயிடுச்சு !
அதனால, நம்ம வயிறோ கண்டதையும் அள்ளி கொட்டுற குப்பை தொட்டியா மாறிடுச்சு !

சமைக்கவோ சாப்பிடவோ நமக்கு நேரமே கிடையாது. கடைல விக்கிற பாக்கெட் உணவுகளை வாங்கி சாப்பிடுறதுதான் பேஷனாப் போச்சு.

                                                     
                                                                                                             ரெடிமேட் சப்பாத்தி ....
                                         ரெடிமேட் பரோட்டா ....
                                     ரெடிமேட் இடியாப்பம் ..... 

இப்படியே போனா ரெடிமேட்ல நோயும் வீடு தேடி வந்துரும் பிட்சா டெலிவரி மாதிரி. 




பொதுவாகவே ரெடிமேட் உணவுகளில் ருசியை கூட்டுவதற்காக மோனோசோடியமும், கலருக்காக சில கெமிக்கல்சும் சேர்க்கப்படுகிறது. ஆப்பிள்ள கூட மெழுகு சேர்க்குறாங்க. அப்பொழுதெல்லாம் ஆப்பிள தோளோட சாப்பிடுறது தான் நல்லது, இப்பலாம் அப்படி சாபிட்டுறாதிங்க...

 இதெல்லாம் கொஞ்சம் அளவு நம்ம உடலுக்குள் நுழைந்தாலும் கெடுதல்தான். 

ஹோட்டல்ல சட்னி, சாம்பார் எல்லாம் பிளாஸ்டிக் பாக்கெட்ல வாங்கிட்டு போறாங்க, சூடான அந்த உணவு பொருளோட பிளாஸ்டிக்ல உள்ள கெமிக்கல்ஸ் கரைந்து உடலுக்குள் நேரடியாக கலக்கின்றன. இந்த மாதிரி கெமிகல் கலந்த உணவு பொருட்கள் சாப்பிடும் போது நம்ம உடலில் உள்ள செல்கள், ஹார்மோன்கள் பாதிப்படையும். பெண்களுக்கு மலட்டுத் தன்மை மேலும் பிறக்கும் குழந்தைகள் சில குறைபாடுகளுடன் பிறக்கும். ஏன் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளும் உண்டு.

இன்னும் அலர்ஜி, உடல் சோர்வு, உடல் வலி, ஒபிசிட்டி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு.. ஏன் நெஞ்சுவலி வர கூட வாய்ப்பு  உள்ளதாம். இதெல்லாம் சொல்றது உங்கள பயமுறுத்த அல்ல. மாறாக விழிப்புணர்வு ஏற்படுத்த தான்.

நம்ம நாட்டில் மக்களின் வாழ்வு  மேன்மை அடைந்துள்ளது என்று பெருமைப் படுகிறோம். ஆனால், நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களை விட உடல் வலிமையிலும் நோய் எதிர்ப்பு சக்தியிலும் பின்தங்கி இருக்கிறோமே இதைப் பற்றி யோசிக்கிறோமா?

கடைசி காலத்துல நல்ல துணையோட வாழ்றது தான் பாக்கியம். ஆனா, மாத்திரை மருந்தோட தான் நடைப்பிணமா காலம் கழியுது. இதற்கெல்லாம் காரணம்..??  


       

     நம்ம பாரம்பரிய உணவு முறைகளை கை விட்டது தான்..!!


எனவே கூடுமான அளவு நம் முன்னோர் கடைப்பிடிச்சு வந்த உணவு முறைகளை அறிந்து கொண்டு அவற்றை உண்டு வந்தாலே போதும் நாம் ஆரோக்யமாக பல ஆண்டுகள் வாழலாம்.















4 comments:

  1. உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி. ..
    உங்கள் வருகை தொடரட்டும். ....

    ReplyDelete
  2. Fact. ..fact. ...fact. ...nice article.

    ReplyDelete